Kathir News
Begin typing your search above and press return to search.

என் செருப்பளவுக்குக் கூட தகுதி இல்லை - நேற்று முதல் நிம்மதி தொலைத்த தி.மு.க'வினர்

மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், ட்விட்டரில் தன்னை கடுமையாக தாக்கிய PTRக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

என் செருப்பளவுக்குக் கூட தகுதி இல்லை - நேற்று முதல் நிம்மதி  தொலைத்த தி.மு.கவினர்

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Sep 2022 10:42 AM GMT

மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்து, அவருடைய உடல் மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கியது. அவருடைய உடலுக்கு வீர அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு கட்சி தலைவர்களும் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்கள். அந்த வகையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களும், மதுரை விமான நிலையத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அதே சமயத்தில் தி.மு.க நிதி அமைச்சர் PTR தியாகராஜன் அவர்களும் அஞ்சலி செலுத்த வந்திருந்தார். அப்பொழுது தியாகராஜர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் PTR அவர்கள் தன்னுடைய twitter பக்கத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை மிகவும் கேவலமான முறையில் கருத்துக்களை தெரிவித்து அவமதித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "உயிர் நீத்த தியாகி உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசியக்கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலணி வீசி அவமதிப்பது, அப்பட்டமாக பொய் கூறுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நீங்கள் தமிழ் சமூகத்தின் சாபக்கேடு" என்று கூறி அண்ணாமலை அவர்களின் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.


இதற்கு பதில் அளிக்கும் வகையில் அண்ணாமலை அவர்கள் கூறுகையில், "உங்கள் முன்னோர்களின் முதல் எழுத்துக்களுடன் மட்டும் தான் வாழும் நீங்களும் உங்களின் கூட்டாளிகளுக்கும், சுயமாக உருவாக்கி விவசாயம் செய்யும் விவசாயியின் மகனை ஒரு நபராக உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது தான். பெரிய பரம்பரை மற்றும் சில்வர் ஸ்பூனில் பிறந்ததைத் தவிர நீங்கள் இந்த பிறவியில் வேறு ஏதாவது செய்து உள்ளீர்களா? அரசியலுக்கும் எங்கள் மாநிலத்திற்கும் சாபக்கேடு நீங்கள். பெரிய விமானங்களில் பயணம் செய்யாத எங்களைப் போன்றவர்களும் இங்கு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இறுதியாக என் செருப்புக்கு கூட தகுதி அல்லாதவர்கள். கவலைப்படாதீர்கள் உங்கள் நிலைக்குக் கீழ் இறங்க ஒருபோதும் மாட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News