Kathir News
Begin typing your search above and press return to search.

பட்டியலினத்தவர்களை கொடி ஏத்த அனுமதிக்காத நீங்க சமூகநீதி'ன்ற வார்த்தையே உச்சரிக்க கூடாது - தி.மு.க'வை கிழித்த அண்ணாமலை

பட்டியல் இனத்தைச் சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்ற தி.மு.க. மறுப்பு.

பட்டியலினத்தவர்களை கொடி ஏத்த அனுமதிக்காத நீங்க சமூகநீதின்ற வார்த்தையே உச்சரிக்க கூடாது - தி.மு.கவை கிழித்த அண்ணாமலை

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Aug 2022 11:43 AM GMT

ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் நாட்டிற்கு ஒரு உதாரணமாக இருந்து கொண்டு ஆட்சி செய்து வருபவர் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள். ஆனால் தமிழகத்திலோ இந்த நிலை தலைகீழாக உள்ளது. பட்டி தொட்டி தோறும் தாங்கள் சமூகநீதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் எங்களுடைய ஆட்சியில் அனைவரும் சமம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு பல்வேறு தி.மு.க தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதைச் சமீப காலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.


அந்த சம்பவங்களில் முதன்மையானது சின்னசேலம் வட்டம் எடுத்தவாய்நத்தம் ஊராட்சி தலைவர் திருமதி. சுதா வரதராஜி அவர்களுக்கு சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றுதல் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதடர்பாக அவர் மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதன் பெயரில் தற்போது அவருக்கு தேசியக் கொடியை ஏற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவர் முயற்சி எடுத்து தன் பெயரில் இவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இதுதடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின்படி, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.


தமிழக தீண்டாமை இயக்கம் நடத்திய கணக்கெடுப்பின்படி 24 மாவட்டங்களில் உள்ள 386 ஊராட்சிகளில், தற்போது 20 பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான தகவல் மட்டுமின்றி 22 ஊராட்சிகளை சேர்ந்த பட்டியலின தலைவர்களுக்கும் மேடையில் அமர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது மேலும் தரையில் அமர்ந்து கொள்ளுமாறு கட்டாயப் படுத்தப் படுகிறார்கள். 42 பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு பெயர் பலகை வைப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதுதான் திமுக ஆட்சியில் சமூக நீதியா? விடியுமா தமிழகம்?

Input & Image courtesy:BJP Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News