திருமாவளவனுக்கு தேசப்பற்று சொல்லிக்கொடுத்த வானதி சீனிவாசன்!
அனைவரையும் வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி சொல்லுங்கள் அரசியல் வேண்டாம் என்று அறிவுரை கூறிய வானதி சீனிவாசன்.
By : Bharathi Latha
அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி சொல்லவேண்டும் தேசப்பற்று அரசியலில் நுழையக் கூடாது என்று திருமாவளவனை சந்தித்து வானதி சீனிவாசன் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். இந்தியா தற்போது 75வது சுதந்திர தினத்தையொட்டி வீடுதோறும் மூவர்ணக்கொடி திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொரு வீடுகளிலும் மூவர்ணக் கொடியை பறக்கவிட வேண்டும் என்பது இந்தியக் குடிமகன் ஆகிய ஒவ்வொரு வகையில் தேசப்பற்றின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது.
இப்படி தேசப்பற்றின் இடையில் அரசியலை நுழைக்க கூடாது என்று பல்வேறு கட்சி தலைவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேண்டும் என்று ஏற்கனவே விடுக்கப்பட்டு இருந்தது. எனவே இது குடிமகனின் தேச பக்தி உணர்வை வெளிப்படுத்தும் ஒரு அழகான தருணம் ஆகும். இந்த தருணத்தில் அரசியல் உணர்வை மக்களிடையே பரப்புவது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். இத்திட்டத்தின்கீழ் சுமார் 20 கோடி வீடுகளில் கொடி ஏற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், பொதுமக்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் ப்ரொபைல் பிக்சராக தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
88வது இராமச்சந்திர ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் விளக்கு பகுதிகளில் மாலை முரசு அலுவலகத்தில் அவருடைய திருவுருவப்படத்திற்கு திருமாவளவன் மலர் செலுத்தி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசன் மரியாதை செலுத்தினார். அப்போது, திருமாவளவனிடம் பேசிய வானதி சீனிவாசன், 75வது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி அனைவரையும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றச் சொல்லுங்கள். அரசியல் வேறு, தேசப்பற்று வேறு என்ற கோரிக்கை வைத்தார்.
Input & Image courtesy: News