Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கருப்பு பூஞ்சை நோய் இல்லை.!
நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், அரியலூர், விருதுநகர், கரூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கருப்பு பூஞ்சை நோய் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By : Thangavelu
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை ஓய்ந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் ஆக்கிரமித்து வருகிறது. இதற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
அதிலும் தென் மாநிலங்களை விட வட மாநிலங்களிலேயே இந்த பாதிப்பு அதிகளவு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 2,667 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 771 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், அரியலூர், விருதுநகர், கரூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கருப்பு பூஞ்சை நோய் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
