கொரோனாவிலிருந்து மீண்டவர்களை கருப்பு பூஞ்சை தாக்கும்? எச்சரிக்கை செய்யும் மருத்துவர்கள்.!
கருப்பு பூஞ்சை நோய் தாக்காமலிருக்க கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர் வல்லுநர் குழு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

By : Thangavelu
கருப்பு பூஞ்சை குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட மருத்துவ வல்லுநர் குழு தமிழக அரசிடம் ஒரு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனிடையே நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 9,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 97 ஆயிரத்து 864ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 210 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,548 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,66,793 ஆக உயர்ந்துள்ளது. அது மட்டுமின்றி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. இதனால் அதிகளவு உயர் பறிபோகி வருகிறது.
இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தாக்காமலிருக்க கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர் வல்லுநர் குழு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஒரு புறம் அச்சுறுத்தி வரும் நிலையில், மறுபுறம் கருப்பு பூஞ்சை அச்சுறுத்தி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
