Kathir News
Begin typing your search above and press return to search.

தென்னிந்தியாவை உலுக்கிய குண்டு வெடிப்பு - பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும் மாநில எல்லைகள்

மங்களூர் ஆட்டோ வெடிகுண்டு விபத்து காரணமாக தமிழக கர்நாடக எல்லையில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவை உலுக்கிய குண்டு வெடிப்பு - பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும் மாநில எல்லைகள்
X

Mohan RajBy : Mohan Raj

  |  20 Nov 2022 7:52 PM IST

மங்களூர் ஆட்டோ வெடிகுண்டு விபத்து காரணமாக தமிழக கர்நாடக எல்லையில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலங்களுருவில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் கர்நாடக தமிழக எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவும் வாகன சோதனையை சாவடிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தவும் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தனியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் நிற்கும் வாகனங்களை சோதனை இடவும், எல்லையை ஒட்டி உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனையை தீவிரப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சென்னை காமராஜர் சாலை, ராயப்பேட்டை, கிண்டி, மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News