Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் பிப்ரவரியில் தொடங்கும் புத்தகக் காட்சி.!

சென்னையில் பிப்ரவரியில் தொடங்கும் புத்தகக் காட்சி.!

சென்னையில் பிப்ரவரியில் தொடங்கும் புத்தகக் காட்சி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Dec 2020 3:33 PM GMT

சென்னைப் புத்தகக் காட்சி அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தலைமுறையினர் பலர் புத்தகம் படிப்பது இல்லை. அனைவரிடமும் செல்போன் மோகம் அதிகரித்துள்ளது. ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையினர் அனைவரும் புத்தகம் மட்டுமே வாசித்து வந்தனர்.

தொலைக்காட்சி இல்லாத காலங்களிலும் சரி தற்போதைய காலத்திலும் அவர்கள் மட்டுமே புத்தகத்தை தொடர்ந்து படித்து வருகின்றனர். அதே போன்று சிட்டி பகுதிகளில் அறவே நின்றுவிடும் சூழலும் உள்ளது. காலையில் செய்தித்தாள் படிப்பது முதற்கொண்டு குறைந்து வருகிறது. இதற்கு தற்போதைய டிஜிட்டல் மையம் ஒரு காரணம் என கூறலாம்.


இந்நிலையில், சென்னை நகரில் புத்தகம் திருவிழா வருடம்தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தள்ளி போயுள்ளது. சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) வருடம்தோறும் பிரமாண்டமான முறையில் புத்தக விற்பனைக் கண்காட்சியை நடத்தி வருகிறது.

வழக்கமாக ஜனவரி மாதத்தில் பொங்கல் விழா விடுமுறை நாள்களை உள்ளடக்கிய காலகட்டத்தில் இந்தப் புத்தகக் காட்சி நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கி, பிற தொழில்களைப் போலவே பதிப்புத் துறையுடன் சேர்ந்து புத்தக விற்பனையும் முற்றிலுமாக முடங்கிவிட்டது.

பதிப்புத் துறை பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் வரும் ஜனவரியில் வழக்கம்போல சென்னைப் புத்தகக் காட்சி நடைபெறுமா, புதிய புத்தகங்கள் வெளிவருமா என்றெல்லாம் அச்சம் நிலவியது. தவிர, புத்தகக் காட்சி போன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டமாகத் திரள அனுமதிக்கப்படுவார்களா என்றெல்லாம் பேசப்பட்டது.

எனினும், வழக்கமான பொது போக்குவரத்துகள் அனுமதிக்கப்பட்டு, கடற்கரையெல்லாம் திறந்துவிடப்படவுள்ள நிலையில் புத்தகக் காட்சிக்கு அனுமதி கிடைக்க வாய்பிருப்பதாக கூறப்படுகிறது. சென்னைப் புத்தகக் காட்சி அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News