இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் : இடம் பெற்ற கோவை மாணவி, மாவட்ட ஆட்சியர் பாராட்டு !
50 திருக்குறள்களை வெறும் 3 நிமிடம் 10 நொடிகளில் ஒப்பனை செய்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம்பெற்றுள்ள கோவை மாணவி அந்த மாவட்டத்தில் ஆட்சியர் பாராட்டி உள்ளார்.
By : Bharathi Latha
தற்போது உள்ள இந்த தொற்று நோய் காலத்தில் பள்ளி மாணவர்கள் பலரும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக அவர்களுக்கு விருப்பமான செயல்களில் ஈடுபடும் பொழுது அதை பெற்றோர்கள் ஊக்குவிப்பதற்கும் தற்போது தயாராக இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் 50 திருக்குறள்களை வெறும் 3 நிமிடம் 10 நொடிகளில் ஒப்பனை செய்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
50 திருக்குறள்களை 3 நிமிடம் 10 நொடிகளில் ஒப்புதல் செய்து, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ள கோவையை சேர்ந்த மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார். எனவே, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார் கோவையை சேர்ந்த மாணவி சிவ தர்ஷினி. மிகக்குறுகிய நேரத்தில் தெள்ளத்தெளிவாக திருக்குறளை பிழை இல்லாமல் இவர் ஒப்பித்து இருக்கிறார்.
குறிப்பாக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவியின் செய்தியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும், மாணவிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெற்றோர்கள் ஊக்குவிக்கும் போது, இத்தகைய செயல்களில் மாணவர்களால் நிச்சயம் ஈடுபட முடியும் என்பதை கோவை மாணவி நிரூபித்து காட்டியுள்ளார்.
Input: https://twitter.com/CollectorCbe/status/1427831748704882690?ref_src=twsrc%5Etfw
Image courtesy:wikipedi