Kathir News
Begin typing your search above and press return to search.

மணல் அள்ளியதை தடுத்த போலீசாரை டிராக்டர் ஏற்றி கொல்லப்பார்த்த தி.மு.க நிர்வாகி !

தி.மு.க கிளைச்செயலாளர் வடிவேலு போலீசார் சுற்றி வளைத்தவுடன் அங்கிருந்து தலைமறைவாகினார்.

மணல் அள்ளியதை தடுத்த போலீசாரை  டிராக்டர் ஏற்றி கொல்லப்பார்த்த தி.மு.க நிர்வாகி !
X

Mohan RajBy : Mohan Raj

  |  19 Aug 2021 4:15 PM IST

மணல் கடத்தலை தடுத்து நிறுத்த முயன்ற போலீசார் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த தி.மு.க பிரமுகரை போலீசார் அலேக்காக தூக்கினர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள ஓரத்தி ஆற்றில் திருட்டுத்தனமாக இரவு நேரங்களில் ஏம்பளம் ஏரியில் மணல் அள்ளுவதாக ஒரத்தி காவல் துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தது. புகாரின் அடிப்படையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட ஒரத்தி போலீசார் ஏரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த வடமணிபாக்கம் தி.மு.க கிளைச் செயலாளர் வடிவேலு என்பவரின் டிராக்டரை மறிக்க முயற்சித்துள்ளனர்.

மறித்த போலீசார் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த தி.மு.க கிளைச்செயலாளர் வடிவேலு போலீசார் சுற்றி வளைத்தவுடன் அங்கிருந்து தலைமறைவாகினார்.

பின்னர் தலைமறைவான திமுக கிளைச் செயலாளர் வடிவேலை காவல் துறையினர் மதுராந்தகம் அருகே பதுங்கி இருக்கும் போது கைது செய்தனர்.


Source - புதிய தலைமுறை

Next Story
கதிர் தொகுப்பு
Trending News