24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி முகாம்: மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதா ?
தமிழகத்தில் இன்று முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் வகையில் பணிகள் நடைபெறும்.
By : Bharathi Latha
இந்தியாவில் குறிப்பாக தடுப்பூசிகள் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஒரு கணிப்பு கூறுகிறது. ஆனால், அது உண்மை இல்லை என்பதற்கு மாறாக மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தடுப்பூசிகள் பற்றாக்குறையின் காரணமாக முன்பு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன ஆனால் தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் பிரிவாக சென்று அடைவதற்கு ஏற்ற வகையில் சிறப்பான திட்டங்களை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் சென்னையில் 24 மணி நேரம் தடுப்பூசி முகாம்கள் தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் சார்பாக, சென்னை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இன்று முதல் 24 மணி நேரமும், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசியை விரைவாக செலுத்தும் வகையில், தமிழக அரசு முகாம்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம், சென்னை DMS வளாகத்தில் 24 மணி நேர தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். தமிழகத்தின் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், இன்று முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி துவங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது மக்களிடம் வரவேற்ப்பை பெற்று உள்ளதா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Image courtesy:Indian Express