3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் !
Breaking News.
By : G Pradeep
சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரி கீதா கூறியதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (2-ந் தேதி) நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும். மற்ற மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வருகிற 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Image : Weather சேனல்