Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக கடற்படை தளங்களில் ட்ரோன்கள் பறக்க தடை ! பாதுகாப்புத் துறை அலுவலகத்தின் திடீர் முடிவு !

தமிழகத்தில் அமைந்துள்ள அனைத்துக் கடற்படைத் தளங்களின் பாதுகாப்பை பலப்படுத்த அதன் மீது ட்ரோன் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடற்படை தளங்களில் ட்ரோன்கள் பறக்க தடை ! பாதுகாப்புத் துறை அலுவலகத்தின் திடீர் முடிவு !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Aug 2021 1:37 PM GMT

ட்ரோன்கள் பறப்பதற்கான விவகாரம் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கு சில மாதங்களுக்கு முன்பு கூட, பாகிஸ்தானின் ட்ரோன் இந்தியாவில் ஜூன் 27 அன்று, இந்திய விமானப்படையின் ஜம்மு விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளது. பாகிஸ்தான் ட்ரோனில் வெடிபொருட்களை வைத்து இந்திய ராணுவத்தை குறிவைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட இத்தகைய சம்பவம் இது தான் முதல் முறை என்று கூறப்படுகிறது.


புதிய வடிவிலான ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அதை இந்தியா எதிர்கொள்ளும் வகையில் தற்பொழுது பாதுகாப்பு ஒப்புதலை இந்திய ராணுவம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்று மற்ற மாநிலங்களிலும் ட்ரோன்களை பறக்க தடை விதிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் சென்னையில் INS அடையாறு, அரக்கோணத்தில் INS ராஜாளி, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள INS பருந்து, திருநெல்வேலியில் INS கட்டபொம்மன் உள்ளிட்ட கடற்படை தளங்கள் உள்ளன. இனி இத்தகைய தளங்களில் மீது ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன.


இந்த கடற்படைதளங்களுக்கு பாதுகாப்பை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தக் கடற்படை தளங்கள் மீது ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இப்பகுதியில் ட்ரோன்கள் உள்ளிட்டவை இயக்க சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள், பொது சிவில் விமான இயக்குநரகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கான அனுமதி பெற டிஜிஸ்கை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒப்புதல் கிடைத்த பிறகு, அதற்கான அனுமதி கடிதத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என பாதுகாப்புத் துறை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input: https://zeenews.india.com/india/navy-declares-areas-within-3-km-of-its-facilities-no-fly-zone-in-tamil-nadu-2386158.html

Image courtesy: zeenews


Next Story
கதிர் தொகுப்பு
Trending News