Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழியின் பெருமையை போற்றும் பிரிட்டானியாவின் புதிய விளம்பரம்!

தமிழ் மொழியின் பெருமையை போற்றும் வகையில் அனைவருக்கும் என்ற பெயரில் புதிய விளம்பர திட்டத்தை பிரிட்டானியா நிறுவனம் அறிமுகம் செய்தது.

தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழியின் பெருமையை போற்றும் பிரிட்டானியாவின் புதிய விளம்பரம்!

KarthigaBy : Karthiga

  |  19 July 2023 9:45 AM GMT

தமிழ்நாட்டின் பெருமை மற்றும் தமிழ் மொழியின் பன்முகத்தன்மை ஆகியவற்றை போற்றும் வகையில் 'அனைவருக்கும்' என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கான புதிய விளம்பர திட்டத்தை பிரிட்டானியா மில்க் பிகிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இன் மார்க்கெட்டிங் தலைமை அதிகாரி அஅமித் தோஷி கூறியதாவது:-


'அனைவருக்கும்' என பெயரிடப்பட்டுள்ள இந்த விளம்பரத் திட்டமானது தமிழ் மொழியின் பன்முகத்தன்மையை கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் அதற்கென்று தனித்துவமான பாரம்பரியம், கண் கவரும் கலை வடிவங்கள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் அழகிய வட்டார மொழி உள்ளது. இவற்றை கொண்டாடும் விதமாகவும் 1978 - ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் எங்கள் மீது காட்டி வரும் அன்பிற்காகவும் நன்றி கூறும் விதமாகவும் எங்களின் 'அனைவருக்கும்' விளம்பர திட்டத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம்.


சென்னை ,கோவை, மதுரை, காரைக்குடி, தூத்துக்குடி, ஈரோடு மற்றும் மேலும் பல ஊர்களில் உள்ள 15-க்கும் மேற்பட்ட பாஷைகளில் 5 வீடியோக்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம். தொழில்நுட்பத்தை கொண்டு ஒவ்வொரு வீடியோவும் அந்த வட்டார மொழி பேசும் ஊர்களில் உள்ள மக்களை சரியாக சென்றடைய வழி வகுத்துள்ளோம். இது மட்டுமின்றி ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றவாறு விளம்பர பலகைகளையும் செய்தித்தாள் விளம்பரங்களையும் இத்திட்டத்தின் கீழ் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.


தமிழ்நாட்டில் உள்ள மூன்றில் ஒரு பங்கு வீடுகளில் ஒவ்வொரு மாதமும் மில்க் பிக்கீஸ் தவறாமல் வாங்கப்படுகிறது. எங்கள் மீது இத்தனை அன்பு கொண்ட தமிழ் மக்களின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம், மொழி, பாரம்பரியம் போன்றவற்றிற்கு நாங்கள் அளிக்கும் சமர்ப்பணமே இந்த 'அனைவருக்கும்' விளம்பர திட்டம். இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News