Kathir News
Begin typing your search above and press return to search.

ஈரோடு -பழனி புதிய ரயில் பாதை திட்டம் - கொங்கு மண்டல மக்களின் நெடுநாள் கனவை நிறைவேற்றும் மத்திய அமைச்சர் எல் முருகன் !

Dr. L. Murugan meets Minister of Railways Shri. Ashwini Vaishnav, requests for broad-gauge railway line from Erode to Palani via Dharapuram

ஈரோடு -பழனி புதிய ரயில் பாதை திட்டம் - கொங்கு மண்டல மக்களின் நெடுநாள் கனவை நிறைவேற்றும் மத்திய அமைச்சர் எல் முருகன் !
X

office_murugan

MuruganandhamBy : Muruganandham

  |  9 Sep 2021 7:30 AM GMT

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய அகல ரயில் பாதை குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு & பால் வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து உரையாடினார்.

மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், அப்பகுதியின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.

வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்றும் டாக்டர் முருகன் கேட்டுக்கொண்டார். இது பாரம்பரிய நகரமான காஞ்சிபுரத்தை, ராமாயணம் சுற்றுலா இணைப்புப்பாதையோடு இணைக்க உதவும். இது உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும்.

ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த இரண்டு கோரிக்கைகளையும் விரிவாக விவாதித்தார். மேலும், தமிழ்நாட்டின் ரயில்வேத் துறையை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

ஈரோடு-பழனி ரயில் திட்டத் துக்கான நில அளவை பணி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு உட்பட்ட சென்னிமலை, காங்கயம், குண்டடம், தாராபுரம், தொப்பம் பட்டி, பழனி ஒன்றிய பகுதிகளில் நடக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News