எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் அங்கன்வாடி மையம்: பொதுமக்கள் அச்சம்!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகே எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம் உள்ளது. அதனை அகற்றிவிட்டு மீண்டும் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
By : Thangavelu
தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகே எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம் உள்ளது. அதனை அகற்றிவிட்டு மீண்டும் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் சாஃப்டர் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதிலும் உள்ள மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சியடைய செய்தது. தமிழகத்தில் இது போன்ற பள்ளிகள் ஏராளமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதே போன்று தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது இருமன்குளம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் செயல்படும் அங்கன்வாடி மைய கட்டடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி உள்ளது. இதனால் குழந்தைகளை அங்கு அனுப்புவதற்கு கூட பெற்றோர்கள் அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கன்வாடியை இடித்துவிட்டு மீண்டும் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: News 7 Tamil