Kathir News
Begin typing your search above and press return to search.

வண்டலூர் உட்பட 2 பேருந்து நிலையங்கள் தனியார்மயம்: தமிழக அரசு முடிவு

வண்டலூர் உட்பட இரண்டு பேருந்து நிலையங்களை தனியார் மயமாக்குவது குறித்து CMDA முடிவு.

வண்டலூர் உட்பட 2 பேருந்து நிலையங்கள் தனியார்மயம்: தமிழக அரசு முடிவு

Bharathi LathaBy : Bharathi Latha

  |  16 April 2022 2:18 AM GMT

2 பேருந்து நிலையங்களை தனியார் மயமாக்குவது குறித்து மற்றும் அதற்கான கலந்தாலோ சக்கரை கலந்து ஆலோசகரை நியமிப்பது குறித்து CMDA முடிவுசெய்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை தனியார் மயமாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. சுமார் 400 கோடி செலவிலும் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திருவள்ளுவர் மாவட்டம் திருமழிசையில் அமைந்துள்ள குந்தம் பாகத்தில் 300 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை தனியார் மயமாக்குவது குறித்த ஆலோசனை.


புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு பேருந்து நிலையங்களில் செங்கல்பட்டில் உள்ள பேருந்து நிலையம் அடுத்த வருடத்திற்குள் திறக்கப்பட உள்ளது. எனவே இரண்டு பேருந்து நிலையங்களை ஒப்பந்த அடிப்படையில் தனியார் மயமாக்குவது குறித்து CMDA முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கான கலந்தாய்வு சக்கரங்களை நியமிப்பது குறித்து சர்வதேச ரியல் எஸ்டேட் குழுமம் முடிவு செய்துள்ளது கலந்து ஆலோசகர்களை நியமிப்பது குறித்து சர்வதேச ரியல் எஸ்டேட் குழுமம் JLL தேர்வு செய்துள்ளது. மேலும் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேருந்து நிலையத்தை தனியார் மயமாக்குவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாகவும் கூறப்படுகிறது.


மேலும் இது குறித்து CMDA கூறுகையில், 15 ஓட்டுனர்களை ஒப்பந்தக் கூலி அடிப்படையில் நிர்வகிப்பது, புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மாற்றுவது குறித்த முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. CMDA வின் தலைமை நிர்வாக அலுவலர் ஆகியோரின் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் பணியாளர்கள் உணவகம் மற்றும் தங்கும் விடுதி அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Input & Image courtesy:Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News