Kathir News
Begin typing your search above and press return to search.

புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 70 பேர் மீது வழக்கு.!

எண்ணெய் நிறுவனங்கங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக 70 பேர் மீது கீரமங்கலம், கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 70 பேர் மீது வழக்கு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 Jun 2021 10:35 AM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொரோனா ஊரடங்கில் போராட்டம் நடத்தியதற்காக 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.





புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் அருகே வடத்தெரு என்ற இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு பெட்ரோலிய துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து, இத்திட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கைவிடக்கோரியும், ஓஎன்ஜிசி நிறுவனத்தை கண்டித்து, வடதெரு, கீரமங்கலம், உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.





இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக 70 பேர் மீது கீரமங்கலம், கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News