சென்னை, விசாரணை கைதி மர்ம மரணம் - சி.பி.சி.ஐ.டி விசாரணை துவங்கியது
By : Thangavelu
சென்னையில், தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதியை போலீசார் அடித்து கொன்றதாக அவர்கள் உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாளை (ஏப்ரல் 26) விசாரணை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் கடந்த 18ம் தேதி எஸ்.ஐ. புகழும் பெருமாள் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அந்த வழியாக சுரேஷ் மற்றும் விக்னேஷ் உள்ளிட்டோரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். இரண்டு பேரிடமும் காவல் நிலையம் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது விக்னேஷிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து செல்லும்போது உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விக்னேஷின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், எஸ்.ஐ., மற்றும் சக போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாளை விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிவில்தான் மர்மம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Asianetnews
Image Courtesy: Dtnext