கோவையில் 3 யானைகள் வேட்டை ! 10 ஆண்டுகள் கழித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு!
கோவை, மேட்டுப்பாளையத்தில் 3 யானைகள் வேட்டையாடப்பட்ட விவகாரத்தில் கடந்த 10 ஆண்டுகள் கழித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
By : Thangavelu
கோவை, மேட்டுப்பாளையத்தில் 3 யானைகள் வேட்டையாடப்பட்ட விவகாரத்தில் கடந்த 10 ஆண்டுகள் கழித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
யானைகள் உயிரிழப்பு தொடர்பாக மத்திய உயிரின குற்ற தடுப்பு பிரிவு மற்றும் சிபிஐ விசாரணைக் கோரி மனோஜ் இமானுவேல், முத்துச்செல்வம் ஆகியோர் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் யானைகள் வேட்டையாடப்பட்டது குறித்து அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டனர். கடந்த 2010 மற்றும் 11ஆம் ஆண்டுகளில் 3 யானைகள் வேட்டையாடப்பட்டது குறித்து தேனியைச் சேர்ந்த குபேந்திரன், சிங்கம் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் 3 யானைகளையும் கல்லார் வனப்பகுதியில் வேட்டையாடியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களில் மட்டும் யானை தந்தம் கடத்தல் குறித்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள் என தெரிகிறது.
Source, Image Courtesy: Puthiyathalamurai
https://www.puthiyathalaimurai.com/newsview/113692/CBI-filed-case-after-10-years-over-elephant-dead-issue