ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.520.. ஒரு டன் கம்பி ரூ.75,000.. விண்ணை முட்டும் கட்டுமான பொருட்களின் விலை.!
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் கட்டுமான பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
By : Thangavelu
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் கட்டுமான பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஒரு மாத இடைவெளியில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.350 ஆக இருந்தது. தற்போது ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.520 ஆக உயர்ந்துள்ளது.
அதே போன்று கடந்த கால ஆட்சியில் ஒரு டன் ஸ்டீல் கம்பி ரூ.68,000 இருந்தது. தற்போதைய திமுக ஆட்சியில் ஒரு டன் ரூ.75,000 ஆக உயர்ந்துள்ளது. ஒரு யூனிட் மணல் ரூ.3800 ஆக இருந்தது. தற்போது ரூ.5200 ஆக உயர்ந்துள்ளது. ஜல்லி ஒரு யூனிட் 3,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
திமுக ஆட்சி அமைந்த ஒரு மாத இடைவெளியில் கட்டுமான பொருட்களின் விலை இப்படி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.