Kathir News
Begin typing your search above and press return to search.

டன் கம்பி ரூ.12 ஆயிரம், ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.60 வரை உயர்வு: விடியல் ஆட்சியில் கட்டுமான பொருட்கள் தாறுமாறாக உயர்வு!

தமிழகத்தில் இரும்பு கம்பி மற்றும் சிமெண்ட் விலை உயர்வு காரணமாக கட்டுமான பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டன் கம்பி ரூ.12 ஆயிரம், ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.60 வரை உயர்வு: விடியல் ஆட்சியில் கட்டுமான பொருட்கள் தாறுமாறாக உயர்வு!

ThangaveluBy : Thangavelu

  |  9 Oct 2021 2:10 AM GMT

தமிழகத்தில் இரும்பு கம்பி மற்றும் சிமெண்ட் விலை உயர்வு காரணமாக கட்டுமான பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடு கட்டுவதற்கு மூலப்பொருட்களான எம்சாண்ட், சிமெண்ட், இரும்பு உள்ளிட்டவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் சாதாரண பொதுமக்கள் விழிபிதுங்கியுள்ளனர். எம்சாண்ட் ரூ.12,500 இருந்த நிலையில் தற்போது ரூ.15,200 ஆகவும், பி.சாண்ட் ரூ.15,500 இருந்த நிலையில், தற்போது ரூ.17,200 ஆகவும், சிமெண்ட் ரூ.380 ஆக இருந்த நிலையில், தற்போது 470 ஆகவும், ஸ்டீல் கம்பி டன் ஒன்றுக்கு ரூ.55 ஆயிரமாக இருந்த நிலையில், ரூ.69 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

மேலும், செங்கல் ஒரு லோடு ரூ.29,250ல் இருந்து ரூ.42,750 ஆகவும், எலல்ட்ரிக்கல் கேபில் ஒயர் 180 மீட்டர் ரூ.4397ல் இருந்து தற்போது ரூ.6387ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது வீடு கட்டும் அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் சாதாரண மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனை உடனடியாக தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் கட்டுமான பொருட்களின் விலை அனைத்தும் கட்டுக்குள் இருந்த நிலையில், திமுக ஆட்சி வந்த பின்னர் அனைத்து பொருட்களும் விலை ஏற்றமாகவே உள்ளது.

Source: Dinakaran

Image Courtesy:Mining News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News