தமிழகத்திற்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை ஒதுக்கிய மத்திய அரசு !
தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை ஒதுக்கியுள்ளது.
By : Thangavelu
தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை ஒதுக்கியுள்ளது.
பிரதமர் மோடி எப்போதும் விவசாயிகள் மீது மிகவும் மரியாதை வைத்துள்ளார். இந்திய வேளாண்துறையை உலகளவில் உயர்த்துவதற்கு அனைத்து வகையிலும் விவசாயிகள் பயனடைய யூரியா, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்வைகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்திற்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி காரைக்கால் துறைமுகத்தில் தற்சமயம் இருப்பில் உள்ள 4 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படும் மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு அறிவிப்பு தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Source: Maalaimalar
Image Courtesy: Opindia