தீன் தயாள் உபாத்யாய் கிராம விருதுகள் - தமிழகத்தில் 12 கிராமங்கள் வென்று அசத்தல்
By : Thangavelu
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்தை சேர்ந்த 12 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு தற்போது விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றியங்களான விருதுகள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மண்டபம் ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளான விருதுகள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அக்கரைப்பட்டி கிராம ஊராட்சி, கரூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மண்மங்கலம் கிராம ஊராட்சி, மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சின்னப்பட்டி கிராம ஊராட்சி, கன்னியாகுமரி மாவட்டம், ராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அத்திக்காட்டுவிளை கிராம ஊராட்சி, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கங்கலேரி கிராம ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம், கரம்பகுடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கட்டாத்தி கிராம ஊராட்சி உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதே போன்று சிறந்த கிராம சபைக்கான தேசிய விருது ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் சாத்தனூர் கிராம ஊராட்சிக்கும், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்திற்கான தேசிய விருது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த துவார் கிராம ஊராட்சிக்கும், குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான விருது நீலகிரி மாவட்டம், கோத்தகரி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த குஞ்சப்பனை கிராம ஊராட்சிக்குள் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் தேசிய விருது பெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டினார். இது போன்று ஏராளமான விருதுகளை தமிழகம் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளார்.
Source, Image Courtesy: Malaimalar