மத்திய அரசின் அற்புதமான திட்டம் 8 வழிச்சாலை.. அமைச்சர் கடம்பூர் ராஜூ.!
மத்திய அரசின் அற்புதமான திட்டம் 8 வழிச்சாலை.. அமைச்சர் கடம்பூர் ராஜூ.!

தமிழகத்தில் சேலம், சென்னை நகரங்களின் பயண நேரத்தை குறைப்பதற்காக மத்திய சாலை போக்குவரத்துறை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கு முடிவு செய்தது.
இதற்காக தமிழக அரசிடம் நிலம் கையகப்படுத்த கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையின்படி தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டது.
இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து விவசாயிகள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் முடிவிற்கு தடை விதித்தது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும் என தீர்ப்பில் கூறியது. இந்நிலையில், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது: மத்திய அரசின் அற்புதமான திட்டம் 8 வழிச்சாலை என்று கூறியுள்ளார்.