மத்திய அரசின் சில்க் சமக்ரா-2 திட்டம்: தமிழ்நாட்டிற்கு கிடைத்த எக்கச்சக்க நன்மைகள்?
தமிழ்நாட்டில் பட்டுப்புழு வளர்ப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் நிதி உதவித் திட்டங்கள்.
By : Bharathi Latha
மத்திய பட்டு வாரியம் மூலம் மத்திய அரசு 2021-22 முதல் 2025-26 வரை தமிழ்நாட்டில் பட்டு வளர்ப்பு உட்பட நாட்டின் ஒட்டுமொத்த பட்டு வளர்ப்புத் தொழிலின் வளர்ச்சிக்காக முழுமையான பட்டு வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டம் எனப்படும் 'சில்க் சமக்ரா-2' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டுகளில் தமிழ்நாடு பட்டு வளர்ப்பு இயக்குநரிடமிருந்து பெறப்பட்ட திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், பல்வேறு மாவட்டங்களில் தற்போது இந்த திட்டத்திற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
அதிலும் குறிப்பாக திருச்சி, பெரம்பூர், தஞ்சாவூர், மயில்டுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு "சில்க் சமக்ரா-2" திட்டத்தின் கீழ் ரூ. 41.20 கோடி நிதி உதவி மத்திய அரசால் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மல்பெரி எனப்படும் முசுக்கொட்டை பட்டு உற்பத்திக்கான வாய்ப்பைக் கொண்ட ஒரு முக்கியமான பாரம்பரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவில் பைவோல்டின் இனப்பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.
2021-22 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 2,373 மெட்ரிக் டன் கச்சா பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 25,500 பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் உள்ளனர். ஓசூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, சேலம், திண்டுக்கல், தேன்கனிக்கோட்டை, பாலக்கோடு, பென்னாகரம், காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம், தஞ்சை, மதுரை, கோயம்புத்தூர் ஆகியவை மாநிலத்தின் முக்கியமான பட்டு நூல் தயாரிப்பு மையங்களாக உள்ளன.
Input & Image courtesy: News