வீடு தேடி தடுப்பூசி திட்டம் ! சென்னையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு!
கொரோனா தடுப்பூசியை வீடு, வீடாக சென்று மக்களுக்கு செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த திட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குஜராத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதே போன்று நாடு முழுவதும் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது.
By : Thangavelu

இந்நிலையில், இன்று (நவம்பர் 8) மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சென்னையில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்தார். அதன்படி கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 1வது தெரு மற்றும் பிருந்தாவன் நகர் ஆகிய இடங்களில் அவர் ஆய்வை தொடங்கினார். அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: நமது பாரதப் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணி குறித்து நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த சமயத்தில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும்படியும் வலியுறுத்தினார்.
மேலும், உலகிலேயே 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்திய நாடுகளில் இந்தியாதான் முதலிடம். தமிழகத்தில் இதுவரை 6 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் முதல் டோஸ் 93 சதவீத மக்கள் செலுத்தியுள்ளனர். இரண்டாவது டோஸை தாமதமின்றி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
Source, Image Courtesy: Twiter