புயல் சேதங்கள் ஆய்வு செய்ய தமிழகம் வரும் மத்திய குழு.!
புயல் சேதங்கள் ஆய்வு செய்ய தமிழகம் வரும் மத்திய குழு.!

வங்கக்கடலில் உருவான நிவர் புயலால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் விவசாய பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி அழிந்தது. புயலால் சென்னை, கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பாதிப்பு ஏற்பட்டது.
பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு சேதம் மதிப்பு குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க 7 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக்குழு கடந்த 1ம் தேதி சென்னை வருவதாக இருந்தது. ஆனால் ‘புரெவி’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய குழுவினர் நாளை தமிழகம் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 4 நாள் பயணமாக வரும் இக்குழுவினர், 6 மற்றும் 7ம் தேதிகளில் புயல் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
நாளை மதியம், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
மேலும், புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்கள் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் சேதங்களையும் சேர்த்து கணக்கீடு செய்யப்படுமா அல்லது மீண்டும் மத்திய குழு டெல்லிக்கு சென்றுவிட்டு வருகை தருமா என்பது தெரியவில்லை.