Begin typing your search above and press return to search.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்.!
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்.!
By : Kathir Webdesk
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி கடலை ஒட்டிய வளிமண்டல கீழடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 89.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 71.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
Next Story