Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2021 9:27 AM GMT

கடந்த ஜனவரி மாதம் முதல் மழை கொட்டித்தீர்த்தது. இதன் பின்னர் ஒன்றரை மாதங்கள் குளிரூடன் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மீண்டும் மழை வருமா என்று ஒரு சில மாவட்ட மக்கள் ஏங்கி கொண்டிருந்த வேளையில் கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு கேரளாவை ஒட்டிய கடலோர வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழையும், வடக்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News