செங்கல்பட்டு ரேஷன் கடையில் ஆய்வு செய்த ஆட்சியர்: அறையை திறக்காமல் தட்டிக்கழித்த ஊழியர்கள்! அப்படி என்ன இருக்கிறது தெரியுமா?
By : Thangavelu
ரேஷன் கடையில் பூட்டிக்கிடந்த ஒரு அறையை பார்வையிட வேண்டும் என்று அங்கு பணியில் இருந்து ஊழியர்களிடம் மாவட்ட ஆட்சியர் உடனடியாக திறந்து காண்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அறையின் சாவி தற்போது இல்லை என்று தட்டிக்கழிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே உள்ள மானாமதி பகுதியில் ரேஷன் கடை ஒன்று அமைந்திருக்கிறது. அங்கு திடீரென்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆய்வு செய்ய வந்துள்ளார்.
அங்கு கடை உள்ளே சென்று பொருட்களின் இருப்பு குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். மேலும், அங்கு அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. அதனை உடனடியாக திறந்து காண்பிக்குமாறு ஆட்சியர் கேட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள் சாவி இல்லை என்று சமாளித்துள்ளனர். அப்போது நீண்ட நேரமாக அங்கு காத்திருந்த ஆட்சியர், அதிகாரிகளிடம் உடனடியாக அந்த அறை திறந்து அதில் என்ன இருக்கிறது என்று தகவலை சொல்ல வேண்டும் என்று அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
அதன்பின்னர் ஆட்சியர் சென்ற பிறகு ஊழியர்கள் அறையை திறந்து காண்பித்தனர். அப்போது பழைய ஆவணங்கள் செல்லரித்துக் காணப்பட்டது. அது மட்டுமின்றி அறை முழுவதும் வௌவால்கள் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இது பற்றி வட்டாட்சியர் ஆட்சியருக்கு தகவலை தெரிவித்தார். இந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்ட அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Source, Image Courtesy: Vikatan