Kathir News
Begin typing your search above and press return to search.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியின்றி மரத்தடியில் படுத்திருக்கும் நோயாளிகள்.!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் நிரம்பியதால் கொரோனா நோயாளிகள் மருத்துவமனை வளாகம் மற்றும் மரத்தடியில் படுத்திருக்கும் அவநிலை ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியின்றி மரத்தடியில் படுத்திருக்கும் நோயாளிகள்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  11 May 2021 7:20 AM GMT




செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் நிரம்பியதால் கொரோனா நோயாளிகள் மருத்துவமனை வளாகம் மற்றும் மரத்தடியில் படுத்திருக்கும் அவநிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டது. புதிய நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலையே உருவாகியுள்ளது.

அதே போன்று நிலையும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இடம் இன்றி தரையில் படுத்திருக்கும் நிலையும் உருவாகியுள்ளது.




இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் மொத்தம் 480 படுக்கைகள் உள்ளது. இதில் 325 படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி உள்ளது. மீதமுள்ள 155 படுக்கைகள் சாதாரண நிலையில் உள்ளது.

இந்நிலையில், இரவு 10 மணியுடன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 325 படுக்கைகளும் நிரம்பியுள்ளது. இதனால் மற்ற பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு படையெடுத்து வரும் நோயாளிகள் வெளியே காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.





இதனால் பல நோயாளிகள் மூச்சு திணறி இறக்கும் நிலையும் உருவாகியுள்ளது. அதே போன்று மருத்துவமனை வளாகம் மற்றும் மரத்தடியில் நோயாளிகளை படுக்க வைத்து உறவினர்கள் பாதுகாத்து வரும் அவலநிலையே உருவாகியுள்ளது.

விரைந்து தமிழக அரசு அதிகப்படியான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை தயார் செய்ய வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News