Kathir News
Begin typing your search above and press return to search.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை.. பீதியில் மற்ற நோயாளிகள்.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் சில நோயாளிகள் மருத்துவமனையில் இருப்பதனை வேதனையாக கருதி தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை.. பீதியில் மற்ற நோயாளிகள்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  13 May 2021 10:38 AM IST

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் சில நோயாளிகள் மருத்துவமனையில் இருப்பதனை வேதனையாக கருதி தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அது போன்ற நிகழ்வு சமீப காலமாக தமிழகத்தில் நடைபெற்று வருவதை காணமுடிகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு பல்வேறு முறைகளில் சிகிச்சை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு மேலையூரைச் சேர்ந்த 48 வயது நபர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையால் மற்ற கொரோனா நோயாளிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News