செங்கல்பட்டில் சிறுமியை கடத்தி சென்று 3 மாதம் பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுமியை கடத்திச்சென்று 3 மாதம் தனி அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.

By : Thangavelu
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுமியை கடத்திச்சென்று 3 மாதம் தனி அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், பழவேலி என்ற பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள் வீட்டில் தனியாக இருந்தபோது, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக அவரது தந்தை செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து சிறுமியை காவல் துறையினர் தேடி வந்துள்ளனர். இதனையடுத்து அதே பகுதியில் வசித்து வந்த பிரபல ரவுடியான விக்கி என்ற விக்னேஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து பல தகவல்களை போலீசாரிடம் கூறியுள்ளார். தனியாக இருந்த சிறுமியை கடத்தி சென்று 3 மாதங்களாக தனி அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இவரது வாக்கு மூலத்தை தொடர்ந்து போலீசார் சிறுமியை மீட்டனர். ஏற்கவே ரவுடி விக்னேஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.
