பெண் எஸ்.பி. புகார் எதிரொலி.. செங்கல்பட்டு எஸ்.பி. பணியிடை நீக்கம்.!
திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றிருந்தார். அப்போது அவரது பாதுகாப்புக்காக சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சென்றிருந்தார். அப்போது அவருடன் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் சிலரும் சென்றுள்ளனர்.

இதனிடையே பாதுகாப்புப் பணியை முடித்துக்கொண்டு சென்னை திரும்பும்போது காரில் பெண் எஸ்.பி.க்கு ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் எஸ்.பி. டிஜிபியை சந்தித்து புகார் அளிக்க சென்னை சென்றிருந்தார். அப்போது செங்கல்பட்டு எஸ்.பியை வைத்து பாதி வழியில் பெண் எஸ்.பியை தடுத்துள்ளார். இதனையும் சேர்த்து டிஜிபியிடம் பெண் எஸ்.பி. புகார் அளித்தார். தற்போது வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.