ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது 2022: இடம்பெற்ற 14 வயது தமிழக மாணவி!
புதைபடிவ தொடர்பான கண்டுபிடிப்புக்காக 14 வயது தமிழக மாணவிக்கு பால் புரஸ்கார் விருது.
By : Bharathi Latha
சென்னையைச் சேர்ந்த சிறுமி தான் அஸ்வதா பிஜூ, வயது 14 ஆகும். இவர்தான் தற்பொழுது இந்தியாவின் மிக இளமையான பேலியன்டாலஜிஸ்ட் ஆவார். பேலியன்டாலஜிஸ்ட் என்பது புதைபடிவ பொருட்களைப் பற்றி தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வது ஆகும். எனவே சிறிய வயதில் இவருக்கு புதைபடிவ பொருட்கள் மீது அதிக ஆர்வம் இருந்ததாகவும் இவருடைய தாயார் இவரை பற்றி கூறுகிறார். மேலும் அவர் சிறுவயதில் இருந்து இது தொடர்பாக பல்வேறு கருத்தரங்குகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது இவர் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் பிரதான மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை தற்போது பெற்றுள்ளார்.
இந்தியா முழுவதும் இந்த ஆண்டிற்கான விருதிற்கு 29 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவர்களின் நம் தமிழகத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளும் இடம்பெற்றுள்ளனர் என்பதும் பாராட்டுக்குரியது. அந்த வகையில் தற்பொழுது விருதைப் பெற்றுள்ள அஸ்வதா அவர்களின் தாயார் விஜயராணி இவரைப் பற்றிக் கூறுகையில், "3 வயதில் இருந்தே இவருக்கு சிற்பிகள் மீது அதிகம் ஆர்வம் இருந்ததாகவும் மேலும் என்சைக்ளோபீடியாவை தொடர்பாக புத்தகங்களை படிப்பதில் அவருக்கு அதிக ஈர்ப்பு இருந்ததாகவும் கூறினார். மேலும் சிறு வயதில் எழுப்பூரிலுள்ள அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றேன். அதன் பிறகு இதுவரை 12 முறைகள் அவர் அந்த அருங்காட்சியகத்திற்கு சென்று வந்ததன் மூலம் அவருக்கு புதை படிமங்கள் மீது அதிக ஆர்வம் வந்ததாகவும் கூறுகிறார் " அவருடைய தாயார்.
மேலும் இவர் புதைபடிவ தொடர்பான பொருட்களை சேகரித்து வைப்பதில் அது தொடர்பான விவரங்களை தெரிந்து வைத்திருப்பதும் வல்லவராக விளங்கியுள்ளார். இதுவரை இவரிடம் 75 விதமான புதைப்படிவ பொருட்கள் இருப்பதாகவும், அதற்காக ஒரு தனி அறையை இவருடைய வீட்டில் இருப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார். மேலும் இவர் புகைப்படம் தொடர்பான கருத்தரங்குகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது, புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையிலும் தன்னுடைய கருத்துக்களை ஆழமாக தெரிவித்து வருகிறார் சிறுமி அஸ்வதா பிஜூ. உயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளையும் இவர் நடத்தி வருகிறார்.
Input & Image courtesy:Twitter post