Kathir News
Begin typing your search above and press return to search.

ஹரியானாவில் பிடிப்பட்ட ஏ.டி.எம். கொள்ளையர்களின் தலைவன்.!

தமிழகத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளை நடந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இந்த கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தனர்.

ஹரியானாவில் பிடிப்பட்ட ஏ.டி.எம். கொள்ளையர்களின் தலைவன்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  2 July 2021 9:55 AM IST

தமிழகத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளை நடந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இந்த கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தனர்.

இதனிடையே கொள்ளை கும்பல் ஹரியானாவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த மாநிலத்தில் முகாமிட்டு கொள்ளை கும்பலை வலை வீசி தேடி வந்தனர்.

இந்த கொள்ளையில் அமீர், வீரேந்திர ராவத், நஜீம் உசேன் ஆகிய 3 பேர் கைதாகினர். இவர்களை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்த தனிப்படை போலீசார் சிறையில் அடைத்தனர். இதற்கு உடந்தையாக இருந்த கும்பலின் தலைவன் சவுகத் அலியை தேடி வந்த நிலையில், ஹரியானாவில் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினால் மேலும் பல உண்மைகள் தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News