உயரும் கொரோனா! சென்னையில் வணிக வளாகங்கள், அங்காடிகள் இயங்க தடையா ?
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் இன்று முதல் அங்காடிகள் செயல்படுவதற்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 9ம் தேதி காலை 6 மணி வரை அங்காடிகள் செயல்படுவதற்கு அனுமதியில்லை. அதன்படி வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை அங்காடிகள் இயங்க அனுமதி இல்லை.
By : Thangavelu

புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை வணிக வளாகம், அங்காடிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை அங்காடிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாரில் வணிக வளாகம், அங்காடிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், என்.எஸ்.சி போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை வணிக வளாகம், அங்காடிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் - காமாட்சி அம்மன் கோயில் கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திருவிகநகர் சந்திப்பு வரை கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
News Source: Chennai Corporation
Image Courtesy: Google