சென்னையில் இன்று முதல் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை.!
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னையி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று முதல் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.
By : Thangavelu
கொரோனா தொற்று பரவல் தினமும் அதிகரித்து வரும் நிலையில், நோய் தொற்றை தடுக்கும் விதமாக சென்னையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று முதல் (ஏப்ரல் 8) சென்னையில் 12 ஆயிரம் பணியாளர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னையி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று முதல் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா என்ற பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் விரைவாக பாதிக்கப்பட்டவர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனமதிக்கப்படுவார்கள். இது பற்றி பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், "சென்னையில் தினமும் சராசரியாக 1,300க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வெளியே வராமல் இருக்கவும் நடவடிக்க மேற்கொள்ளப்படும் என கூறினார்.