Kathir News
Begin typing your search above and press return to search.

வருகின்ற நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்குமா? சென்னை மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி.!

வடமாநிலங்களில் தொற்றின் வீரியம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

வருகின்ற நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்குமா? சென்னை மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  30 April 2021 6:18 PM IST

வருகின்ற நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று செனனை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்து வருகிறது. பலர் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பைவிட வைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வடமாநிலங்களில் தொற்றின் வீரியம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: வருகின்ற காலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 சதவீதம் பேருக்கு உயர்வகை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News