சென்னை: மருத்துவமனையில் இடம் இல்லாததால் ஆம்புலன்ஸிலேயே 4 பேர் உயிரிழப்பு.!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே காத்திருந்த 4 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. மருத்துவமனை முழுவதும் நோயாளிகள் நிரம்பியுள்ளனர். எங்கு பார்த்தாலும் மரண சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
By : Thangavelu

தமிழகத்தில் பல்வேறு சுடுகாடுகளில் சடலங்களை எரிப்பதற்கு இடம் இல்லாமல் வரிசையாக வைக்கப்படும் அவல நிலையே தொடர்கிறது. தமிழக அரசு போதுமான அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவே, மரணங்கள் அதிகளவு நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸில் வருகின்றனர். அவ்வாறு நேற்று வந்த 25 பேர் ஆம்புலன்ஸிலேயே சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்துக்கிடக்கும் சூழலுக்கு ஆளாகினர்.
அங்கு 1,200 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பிவிட்டதால், அவர்களை மருத்துவமனையில் சேர்க்க முடியாத நிலை உருவானது. இதனால் சிகிச்சையே பெற முடியாமல் 4 கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் சென்னை வாசிகளிடையே மிகப்பெரிய பதற்றத்தையும், பீதியையும் உண்டாக்கியுள்ளது. இனிமேல் ஆவது தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே பல லட்சம் மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற முடியும் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.