Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா தொற்று.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் முதல் அலையின்போது சென்னைதான் அதிகப்படியான பாதிப்புகளை சந்தித்தது. அதிகளவிலான மக்கள் தொகை காரணமாக தொற்று பரவியிருந்தது என கூறப்பட்டது. உள் மாவட்டங்களில் தொற்று சற்று குறைந்தே காணப்பட்டது.

சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா தொற்று.!
X

ThangaveluBy : Thangavelu

  |  24 Jun 2021 12:44 PM IST

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் முதல் அலையின்போது சென்னைதான் அதிகப்படியான பாதிப்புகளை சந்தித்தது. அதிகளவிலான மக்கள் தொகை காரணமாக தொற்று பரவியிருந்தது என கூறப்பட்டது. உள் மாவட்டங்களில் தொற்று சற்று குறைந்தே காணப்பட்டது.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலையின் தொடக்கத்தில் மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. இதன் பின்னர் படிப்படியாக தொற்று எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதன்படி 2ம் அலையின் தீவிரம் குறைவதற்கு முன்பாக சென்னையில் தொற்று 500க்கும் கீழ் சென்றது.

இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்துக் காட்டியதாக பலர் புகார் எழுப்பினர். மாநகராட்சி புள்ளி விவரங்களின்படி 21ம் தேதி 1,343 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தினமும் 500க்கும் குறைந்து தொற்று எண்ணிக்கை பதிவாகியிருந்தது.

இதனிடையே 22ம் தேதி திடீரென்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,351 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இவ்வளவு பேர் எப்படி சேர்க்கப்பட்டனர் என மக்களிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News