நாளை முழு ஊரடங்கு.. சென்னை மாநகராட்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு.!
நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. அதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
By : Thangavelu
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த கடந்த 20ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு கூறியிருந்தது.
அதன் படி, நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. அதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அந்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை. அத்தியாவசிய தேவையான மருத்துவத்திற்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்கூட்டியே தேவையான மளிகை பொருட்களை நகர்புற மக்கள் வாங்கி வருகின்றனர். இதனால் கடைகளில், மால்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், சென்னையில் அம்மா உணவகங்கள வழக்கம் போல செயல்படும் எனவும், கொரோனா வழிமுறைகளை பின்பற்றி உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போதுமான உணவுப் பொருட்களையும் இருப்பு வைத்திருக்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.