வாக்கு எண்ணும் மையத்தில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.!
சென்னையில் மாநகராட்சி களப் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
By : Thangavelu
சென்னையில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் 1.4 சதவீதமாக குறைந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் மாநகராட்சி களப் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனிடையே அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள் பேட்டியில், ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. அவசர ஊர்திகள் மருத்துவமனையில் காத்திருப்பது தவிர்க்கப்படும் என்றார்.
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய அவசர ஊர்தி தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக பொதுமக்கள் கட்டாயம் சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறினார்.