Kathir News
Begin typing your search above and press return to search.

பொது இடங்களில் குப்பை போட்டால் 2 லட்சம் அபராதமா? சென்னை மாநகராட்சி எச்சரிக்கை பின்னணி!

பொது இடங்களில் குப்பை போட்டால் இனி அபராதம் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விதித்து இருக்கிறது.

பொது இடங்களில் குப்பை போட்டால் 2 லட்சம் அபராதமா? சென்னை மாநகராட்சி எச்சரிக்கை பின்னணி!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Feb 2023 3:34 AM GMT

பொது இடங்களில் குப்பை போட்டால் இனி அபராதம், சென்னை மாநகராட்சி எச்சரிக்கை:

சென்னையில் கடைகளில் இரண்டு குப்பை தொட்டிகள் வைக்காவிட்டால் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் பொது இடங்களில் குப்பை போட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடியாக நடவடிக்கை எடுத்து எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது. குறிப்பாக சென்னை நகரில் குவியும் குப்பைகளை தரம் பிரிப்பதில் ஏற்பட்டுள்ள சிரமத்தை போக்குவதற்கு மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் 94,523 கடைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடைகள் அனைத்திலும் இரண்டு குப்பை தொட்டிகள் வாடிக்கையாளர்கள் பார்வையில் தெரியும் படி வைத்திருக்க வேண்டும்.


அவை ஒன்று மக்கும் குப்பை போட வேண்டிய குப்பை தொட்டி மக்காத குப்பைகளை போட வேண்டிய குப்பைத்தொட்டி என தெளிவாக எழுதி வைத்திருக்க வேண்டும் தவறும் கடைகளுக்கு 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா தற்போது ஏற்ற இடத்தில் இருக்கிறார் குறிப்பாக இதன் முதல் கட்டமாக 18 சாலைகள் தேர்வு செய்ய ப்பட்டு இருக்கிறது திருவொற்றியூர் நெடுஞ்சாலை அம்பத்தூர் செங்குன்றம் சாலை பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட வை இதில் அடங்கும்.


இந்த சாலைகளில் 196 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. பொது இடங்களில் குப்பைத்தொட்டி நகரை அழகைக் கெடுப்பத தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுத்து இருக்கிறது. பஸ் நிறுத்தங்களில் வைப்பதற்காக 442 சிறிய குப்பை சேமிப்பு பெட்டிகளை மாநகராட்சி வாங்கி வைத்து இருக்கிறது. பொது இடங்களில் தூய்மையை பராமரிக்கும் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு தருவார் தெரிவிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Input & Image courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News