கொரோனா கட்டுப்பாடு: சென்னையில் கூடுதலாக 400 அரசு பேருந்துகள் இயக்கம்.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு நாளை முதல் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
By : Thangavelu
பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் 300 முதல் 400 பேருந்துகள் வரை கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு நாளை முதல் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பேருந்துகளில் சீட்டில் அமர்ந்துதான் பயணம் செய்ய வேண்டும்.
நின்று கொண்டு செல்ல அனுமதி இல்லை. இதன் மூலம் அதிகமான பயணிகள் பேருந்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்ட சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 400 பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படும். அதே சமயம் மாலை நேரங்களிலும் பேருந்துகள் அதிகமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இப்பேருந்துகள், செங்கல்பட்டு, தாம்பரம், கேளம்பாக்கம், மணலி, ஆவடி, பெரம்பூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் இயக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.