மீன்பிடித் தடைக்காலம்: சென்னை காசிமேட்டில் வரிசை கட்டும் விசைப்படகுகள்.!
தற்போது மீன்பிடித்தடைக்காலம் என்பதால், வருமானம் இன்றி வீடுகளிலேயே இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
By : Thangavelu
தமிழ்நாடு முழுவதும் கடற்கரையோ மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அனைத்து மீனவர்களும் கடலுக்கு செல்லாமல் கரையில் விசைப்படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
தற்போது மீன்பிடித்தடைக்காலம் என்பதால், வருமானம் இன்றி வீடுகளிலேயே இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை காசிமேடு துறைமுகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடலுக்கு செல்லாமல் இருப்பதால் படகுகளை சுத்தம் செய்து பழுது நீக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதே போன்று நாகை மாவட்டத்தில் உள்ள கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நாகூர், செருதூர் உள்ளிட்ட 64 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் விசைப்படகுகளை கரையேற்றும் பணியில் ஈடுப்டடுள்ளனர்.
அடுத்து வரும் 61 நாட்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள் என்பதால், அனைத்து படகுகளையும் பழுது நீக்கி, வலைகளை சீரமைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.