சென்னையில் தங்கத்தின் விலை நிலவரம்.!
கொரோனா காலத்தில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகளவு இருந்தது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஒரு சவரன் நகை 40 ஆயிரத்தை தாண்டியது.
By : Thangavelu
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 33 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா காலத்தில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகளவு இருந்தது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஒரு சவரன் நகை 40 ஆயிரத்தை தாண்டியது.
இதனால் தங்கத்தை வாங்குபவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்பட்டனர். கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால், தொழில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை நிறுத்திக்கொண்டனர். இதனையடுத்து தங்கத்தின் மீதான விலை சற்று குறையத் தொடங்கியது.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.33,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு சற்று குறைந்து ரூ.69.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.69,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.