Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் கொரோனா தடுப்பூசிக்கு லஞ்சம்: இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் கைது.!

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்துள்ள புழல் லட்சுமிபுரம் கல்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகோபால், இவர் தனது மனைவியுடன் தடுப்பூசி போடுவதற்காக புழல் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

சென்னையில் கொரோனா தடுப்பூசிக்கு லஞ்சம்: இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் கைது.!

ThangaveluBy : Thangavelu

  |  2 Jun 2021 12:08 PM GMT

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்துள்ள புழல் லட்சுமிபுரம் கல்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகோபால், இவர் தனது மனைவியுடன் தடுப்பூசி போடுவதற்காக புழல் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தடுப்பூசி காலியாகி விட்டது என கூறியுள்ளனர். இதனையடுத்து இருவரும் வீடு திரும்ப இருந்த நிலையில், அங்கு காவலராக பணியாற்றிய தினகரன் என்பவர் ரூ.500 கொடுத்தால் உடனடியாக தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.

அப்போது பிரசாந்த் என்பவரிடம் நந்தகோபால் ரூ.300 கொடுத்துள்ளார். மீதி பணத்தை கூகுள்பே மூலமாக அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். இதன் பின்னர் தடுப்பூசி போடுவதற்காக இருவரையும் மருத்துவரிடம் அனுப்பி வைத்துள்ளார் காவலர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் நந்தகோபால் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து காவலர் தினகரன், பிரசாந்த் இருவரையும் கைது செய்தனர். மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி போடுவதற்காக மருந்துகளை அனுப்பி வைத்தால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் லஞ்சமாக வாங்கிக்கொண்டு தடுப்பூசி போடும் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News