Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  12 July 2021 6:59 PM IST

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியதால், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனை தடுக்கின்ற வகையில் சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டும் ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்நிலையில், டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுடுள்ளதாக மாநகராட்சி சார்பல் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்டுக்கொண்ட நீதிபதிகள் 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளதால் டெங்கு பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், அதன் பயன்கள் பற்றியும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News