சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு.. முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு.!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு.. முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு.!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி கடந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி ஓய்வு பெற்றார். அதனால், புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த சஞ்சிப் பானர்ஜி பெயரை உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.
இவர் கொல்கத்தா, ஒடிசா, டெல்லி நீதிமன்றங்களில் பணியாற்றியுள்ளார். இவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக்குவதற்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் தரப்பில் பரிந்துரை செய்தது. கொலிஜியத்தின் இந்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சிப் பானர்ஜியை நியமிக்க ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், சென்னை, ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் தலைலை நீதிபதியாக சஞ்சிப் பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றனர். 1862ம் ஆண்டில் உதயமான சென்னை உயர்நீதிமன்றத்தின் 50ஆவது, சுதந்திரத்திற்கு பின் 31வது நீதிபதியாக சஞ்சிப் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.